சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாளுக்காக இன்று திறப்பு 

 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாளுக்காக இன்று திறப்பு 

சபரி மலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காகவும், சித்ர ஆட்ட திருநாளுக்காகவும் இன்று மாலை திறக்கப்படுகிறது. 

இந்தியாவில் புகழ் பெற்ற சபரிமலை ஜய்யப்பன் திருக்கோயிலில் ஓவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியின்று நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை திறக்கபடுவது வழக்கம்.

iyappan

அதே போல் ஐப்பசி மாதம் முதல் தேதியன்று நடை திறக்கப்பட்ட நிலையில்  இன்று மாலை ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாளுக்காக நடை திறக்கப்பட்டு இன்று மாலை 5 மணியில் இருந்து 6 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் என்று தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

இதனைஅடுத்து 2018 -ஆம் ஆண்டின் மண்டல பூஜைக்காக, நவம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய இந்த இரண்டு நாட்களிலும் அதிக அளவில் வர இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோயிலினை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக தேவஸ்தானம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

iyapppan

கடந்த மாதம் கோயில் நடை  திறந்தபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், இறுதி வரை பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது. சபரிமலை சன்னிதானம் அருகே முதல் முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில்
ஈடு படவுள்ளனர்.