சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை 10 நாளில் முடிக்க வேண்டும்…. உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை 10 நாளில் முடிக்க வேண்டும்…. உச்ச நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை 10 நாளில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என 2018ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். கடந்த நவம்பர் இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சீராய்வு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாதன அமர்வுக்கு மாற்றினர்.மேலும், சபரிமலை வழக்குடன், மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது மற்றும் பிற மத ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை தங்கள் வழிபாட்டு தலங்களில் அனுமதி அளிப்பது தொடர்பான வழக்குகளும் விசாரிக்கப்படும் என தங்களது உத்தரவில் தெரிவித்து இருந்தனர். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

இதனையடுத்து கடந்த 13ம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல்கள் ஒன்று கூடி அமர்ந்து பேசி மத அடிப்படையிலான நம்பிக்கை மற்றும் ஒருவடைய அடிப்படை நம்பிக்கை ஆகியவற்றை பற்றி முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கலாம். விசாரணையின் போது ஒவ்வொரு தரப்பு வாதமும் கேட்கப்படும் என கூறி வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

சபரிமலை அய்யப்பன் கோயில்

இந்நிலையில் நேற்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாதன அமர்வில் நம்பிக்கை மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து வக்கீல்கள் இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதனால் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை நீதிமன்றமே முடிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும்  அது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வரைவு ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மசூதி

இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே, சொலிசிட்டர் ஜெனரலின் வேண்டுகோளை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், இந்த வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும். அதற்கு மேல் காலஅவகாசம் கொடுக்க முடியாது எனவும்  தெரிவித்தார்.