சபரிமலையில் புஷ்பாபிஷேகம் செய்வது எப்படி ?

 

சபரிமலையில் புஷ்பாபிஷேகம் செய்வது எப்படி ?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் புஷ்பாபிஷேகம் செய்வதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்போம்.

சபரிமலை :  

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். 

sabarimala

சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்று புஷ்பாபிஷேகம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் ஐயப்பனுக்கும் மாளிகைப்புறத்தம்மனுக்கும் புஷ்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இக்கோயிலில் இரவு 7:00 மணி முதல் 9:00 வரை ரோஜா, தெற்றி, துளசி, முல்லை, அரளி, செவந்தி, வில்வஇலை என ஏழு வகை பூக்களால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெறும். 

sabarimala

தேவசம்போர்டு அலுவலகத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் இந்த வழிபாட்டை நடத்த முடியும். பூக்களை பக்தர்களே மூலஸ்தானத்திற்கு எடுத்துச்சென்று பூசாரிகளிடம் கொடுத்து அபிஷேகம் செய்வதை தரிசனம் செய்யலாம்.

பக்தர்களுக்கு பூக்களும், மாலைகளும் பிரசாதமாக வழங்கப்படும்.புஷ்பாபிஷேகம் நடத்தும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதற்கு தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது மாளிகைப்புறத்தம்மன் கோயிலும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு தனியாக 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

sabarimala

மேலும் இதுகுறித்த விபரங்களை 04735 202026, 94464 33811 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டும் இன்றி  www.sabarimala.tdb.org.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.