சபரிமலையில் தரிசனம் செய்த இரண்டு பெண்கள் பக்தர்களா? உயர்நீதிமன்றம் கேள்வி!

 

சபரிமலையில் தரிசனம் செய்த இரண்டு பெண்கள் பக்தர்களா? உயர்நீதிமன்றம் கேள்வி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைந்த பிந்து மற்றும் கனக துர்கா உண்மையான பக்தர்கள்தானா, அவர்களின் நோக்கங்களையும் கேரள அரசு ஆராய வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைந்த பிந்து மற்றும் கனக துர்கா உண்மையான பக்தர்கள்தானா, அவர்களின் நோக்கங்களையும் கேரள அரசு ஆராய வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்திட வேண்டும் என கேரள அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. மேலும், கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் காவல்துறை பாதுகாப்போடு சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் முழு அடைப்பும் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில், பல தரப்பட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

kerala

சபரிமலை தொடர்பான வழக்கைக் கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பி.ஆர்.ராமசந்திர மேனன், என்.அனில் குமார் அமர்வு விசாரித்து வருகிறது. இவர்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்குப் பல கேள்விகளை முன் வைத்தனர். அதில், ‘ உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாநில அரசு சிரமங்களை சந்தித்து வருகிறது. சபரிமலை கோவில் பக்தர்கள் நிம்மதியாக வந்து செல்ல வேண்டிய இடம். ஒருபோதும் அதன் தன்மை பாதிக்கக் கூடாது. பிந்து – கனகதுர்கா ஆகியப் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து ஏதாவது மறைமுக திட்டம் இருக்கிறதா ? அவர்கள் இருவரையும் வேறு யாரேனும் இயக்குகிறார்களா என்பதை மாநில அரசு விசாரிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

kerala hc

இது குறித்து மேலும் பல கருத்துகளைத் தெரிவித்த நீதிபதிகள், பம்பாவில் வாகன நிறுத்தம் கிடையாது. நிலக்கல்லில்தான் நிறுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. பின்பு, எதனடிப்படையில் சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பு பெண்களின் வாகனங்களுக்கு மட்டும் பம்பா வரை அனுமதியளிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.