சபரிமலையில் இன்று “மண்டல விளக்குப் பூஜை”… ஏராளமாகத் திரளும் பக்தர்கள் !

 

சபரிமலையில் இன்று  “மண்டல விளக்குப் பூஜை”… ஏராளமாகத் திரளும் பக்தர்கள் !

திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி, இன்று மண்டல விளக்குப் பூஜையின் போது, ஐயப்பன் சுவாமிக்குச் செலுத்தப்படும்.

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.கார்த்திகை பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இந்த மாதம் 27-ந் தேதியும் (இன்று) , மகர விளக்குப் பூஜை ஜனவரி 15-ந் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 

ttn

இதனைக் காண ஏராளமான மக்கள் கடந்த சில நாட்களாகச் சபரிமலைக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் சுமார் 40 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்தப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகமாக வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

ttn

திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி ஊர்வலமாகப் புறப்பட்டு நேற்று சபரிமலைக்கு வந்து சேர்ந்தது. அந்த தங்க அங்கி இன்று மண்டல விளக்குப் பூஜையின் போது, ஐயப்பன் சுவாமிக்குச் செலுத்தப்படும்.

ttn

சிகர நிகழ்ச்சியான மண்டல விளக்குப் பூஜையையொட்டி, இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர், மண்டல விளக்குப் பூஜை தொடங்கியுள்ளது. பூஜை நிறைவடைந்தவுடன் இரவு 10 மணிக்கு நடை  அடைக்கப்பட்டு, மீண்டும் டிசம்பர் 30 ஆம் தேதி மாலை மகர விளக்குப் பூஜைக்காகத் திறக்கப்படும்.