சபரிமலைக்கு செல்ல வேண்டாம்; காலில் விழுந்து நூதன போராட்டம்

 

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்; காலில் விழுந்து நூதன போராட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்ல வேண்டாம் என பெண்கள் காலில் விழுந்து பக்தர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்பட இருக்கிறது. இதனால் பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பலத்த காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படியே இன்று 3 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். ஆனால் அவர்களை கோயிலுக்கு செல்லவிடாமல் பம்பையில்  ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இருப்பினும் மாதவி என்ற ஒரு பெண்ணை பத்திரமாக மீட்டு காவல்துறையினர் கோயிலுக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்று பக்தர்கள் பெண்களின் காலில் விழுந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டக்காரர்கள் இரண்டு பெண் பத்திரிகையாளர்களை தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.