சன் பிக்சர்ஸ் அடுத்த படம் இவருடன் தானாம்! அப்போ குழந்தைகளுக்கு செம்ம ஜாலி தான்!

 

சன் பிக்சர்ஸ் அடுத்த படம் இவருடன் தானாம்! அப்போ குழந்தைகளுக்கு செம்ம ஜாலி தான்!

 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டது.

ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தையும் தயாரித்து வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷின்  44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டது.

 

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் அடுத்த தயாரிப்பு குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது ரஜினி, தனுஷை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குநர் சுந்தர்.சி -யுடன் அரண்மனை 3 இல் இணைய போகிறதாம். ஆர்யா, சுந்தர் சி, யோகிபாபு, ராஷிகன்னா, விவேக், உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 20 ஆம் தேதி துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ttn

ஏற்கனவே வெளியான அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் போலவே இந்த படத்திலும் த்ரில்லர், காமெடி என சுந்தர் சி படத்திற்கே உரிய மசாலா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.