சந்தையில் புதுசு!  லாவா A5 மாடல் 2.4 இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகம்! ரூ.1,399/-

சந்தையில் புதுசு!  லாவா A5 மாடல் 2.4 இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகம்! ரூ.1,399/-

இளைஞர்களிடையே நாளுக்கு நாள் புதிது புதிதாக அறிமுகமாகும் செல்போன்களின் மீது ஏற்படும் மோகம் தீர்வதேயில்லை. விதவிதமான மாடல்களில் செல்போன்களை மாற்றிக் கொண்டே இருப்பதால் இந்திய இளைஞர்களைக் குறி வைத்து பல செல்போன் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. இந்நிலையில், லாவா மொபைல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் அந்நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

lava

இந்திய இளைஞர்களைக் குறி வைத்து, அவர்களைக் கவர்வதற்காக லாவா A5 என அழைக்கப்படும் புதிய மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மொபைலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே வசதியும், செல்போனில் கூடுதல் ஸ்டோரேஜ் வசதிகளையும் மேம்படுத்தியிருக்கிறது. இவை தவிர, டூயல் சிம், யு.எஸ்.பி., ப்ளூடூத், மியூசிக் பிளேயர், வீடியோ பிளேயர், ரெக்கார்டிங் வசதி கொண்ட வயர்லெஸ் எஃப்.எம். என்று சிறப்பம்சங்களும் இந்த மாடல் மொபைல் போனில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ப்ளூவுடன் சில்வர் நிறத்திலும், ரோஸ் கோல்டு நிறத்திலும் தற்போது இந்த மொபைல் போன்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் இதன் விலையாக தற்போது ரூ. 1,399 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.