சந்திராயன் 2 – நம்மால் சாதிக்க முடியும்! மயில்சாமி அண்ணாதுரை பேட்டி!

சந்திராயன் 2 – நம்மால் சாதிக்க முடியும்! மயில்சாமி அண்ணாதுரை பேட்டி!

இந்தியாவின் சந்திராயன் 2 நிலவை நெருங்கியதை உலக நாடுகள் ஆர்வத்துடனும்,அதிர்ச்சியுடனும் கவனித்து வந்தன. சந்திராயன்2 வை நிலவிற்கு அனுப்பியதன் மூலமாக உலக நாடுகளில், நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் முதல் நாடு என்கிற பெருமையையும் பெற்று இந்தியா சரித்திர சாதனைப் படைத்தது.இந்நிலையில், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதற்கு சில கிலோ மீட்டர்கள் தூர இடைவெளியே இருந்த போது, சந்திராயன் -2 விலிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் கிடைக்காமல், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

chandrayan 2

இந்நிலையில், இந்தியாவில் சாதிக்க முடியும். இது பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை என்று சந்திராயன் 1 திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறியிருப்பதாவது, ‘சந்திராயன் 2 இன்னமும் ஆர்பிட்டரைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு அது இயங்கும். அதற்குள் இன்னொரு லாண்டரை மட்டும் தயார் செய்து நாம் அனுப்பினால், இதில் நம்மால் சாதிக்க முடியும்.

mayilsamy annadurai

மீண்டும் அனுப்பி வைப்பதற்கு நாம் 968 கோடி ரூபாய் செலவு செய்யத் தேவையில்லை. கால தாமதமின்றி, சிக்கனமாக புதிய லேண்டரை சில நூறு கோடி ரூபாய்களில் செய்து அனுப்பி வைக்க முடியும். நிலவு தொடர்பான திட்டங்களில் இதைப் பூர்த்தி செய்த பிறகு தான் அடுத்த கட்டத்துக்கு நம்மால் முன்னேற முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.