சந்திரயான் 2 குழுவை சந்தித்த கலிபோர்னியா விஞ்ஞானிகள்

 

சந்திரயான் 2 குழுவை சந்தித்த கலிபோர்னியா விஞ்ஞானிகள்

இஸ்ரோவின் சந்திரயான் 2 குழுவை கலிபோர்னியா விஞ்ஞானிகள் சந்தித்து பேசினர். மேலும் விண்வெளி துறையின் செயலளரையும் அவர்கள் சந்தித்து பேசினர்.

இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான் 2வை விண்ணில் ஏவியது. சந்திரயான் 2 திட்டமிட்டப்படி தனது பயணத்தை மேற்கொண்டு வந்தது. கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை 1.30 முதல் 2.00 மணிக்குள் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலவின் மேற்பரப்பில் 2.1 கி.மீட்டர் தொலைவில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 திட்டம் பின்னடைவை சந்தித்தது.

சந்திரயான் 2

இருப்பினும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் சாட்டிலைட் உதவியுடன் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்தது. தற்போது விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகின் டாப் 10 பல்கலைகழகங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சந்திரயான் 2 குழுவை சந்தித்து பேசினர். 

இஸ்ரோ

கலிபோர்னியா பல்கலைகழக புரோபசர் டேவிட் திர்றல் தலைமையில் வந்துள்ள விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமை அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் சந்திரயான் 2 குழுவை சந்தித்து பேசினர். மேலும் விண்வெளி துறையின் செயலளரையும் அவர்கள் சந்தித்து பேசினர். சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்த அடுத்த சில நாட்களில் கலிபோர்னியா குழுவினர் இஸ்ரோ குழுவை சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.