சந்திரபாபு நாயுடு – ராகுல் கூட்டணி முறிந்தது; ஆந்திர அரசியலில் சலசலப்பு

 

சந்திரபாபு நாயுடு – ராகுல் கூட்டணி முறிந்தது; ஆந்திர அரசியலில் சலசலப்பு

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அமராவதி: மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி 119 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. 

இதனால், அதிருப்தியடைந்த ஆந்திர காங்கிரஸ் சீனியர்கள், தெலுங்கு தேசத்துடன் கூட்டணியை முறித்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 

அதன் அடிப்படையில், ஆந்திர தேர்தலில் 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக ஆந்திராவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புகள் அதிகமாக உருவாகி இருக்கும் இந்தச் சூழலில், காங்கிரஸ் – தெலுங்கு தேசம் இடையேயான இந்த திடீர் உரசல், ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.