சத்தமே இல்லாமல் விலையை உயர்த்திய டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்கள்

 

சத்தமே இல்லாமல் விலையை உயர்த்திய டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்கள்

கடந்த 2 மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விலையை சத்தமே இல்லாமல் ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரை உயர்த்தி விட்டன பல டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்கள்.

பொருளாதார மந்தநிலை, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது போன்ற காரணங்களால் வாகனங்கள் விற்பனை படுத்து விட்டன. குறிப்பாக பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. இருப்பினும், டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி விட்டன.

பைக்

தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் செலவினங்கள் அதிகரித்து விட்டதால் வேறுவழியின்றி வாகனங்களின் விலையை உயர்த்தியதாக தங்களது தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றன டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்கள். ஹீரோ மோட்டோ கார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ். மோட்டார் மற்றும் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த 2 மாதத்தில் பல இருசக்கர வாகனங்களின் விலையை ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் உயர்த்தி உள்ளன.

பைக்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் தேவாஷிஷ் ஹண்டா  இது குறித்து கூறுகையில், இந்த விலை உயர்வு மிகவும் குறைவு மற்றும் இதை தாங்கும் தயாரிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளோம். இந்த விலை உயர்வு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஸ்கூட்டர் விலையை மட்டுமே உயர்த்தி உள்ளோம். மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தவில்லை. ஏனென்றால் 2 மாதங்களுக்கு முன்புதான் அதன் விலையை உயர்த்தி இருந்தோம் என்று கூறினார்.