சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு? – பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் காமெடி!

 

சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு? – பிரிட்டன்  பிரதமர் வேட்பாளர் காமெடி!

அடுத்த பிரதமராக வரவேண்டியவர் வீட்டில் தீவிரவாத தாக்குதலோ என்னவோ என நினைத்து பறந்துவந்தது லண்டன் போலீஸ். ஆனால், உள்ளேப் போய் பார்த்தபிறகுதான் அது உள்வீட்டு தீவிரவாதம் என தெரிந்திருக்கிறது. போரிஸ் அசடு வழிந்துகொண்டு நின்றிருக்கிறார். ஒருவழியாக சமாதானம் பேச்சுவார்த்தை பலன் தந்து, சண்டை நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு அமலுக்கு வந்திருக்கிறது.

லண்டனின் முக்கியமான வீதியில் பாதசாரி ஒருவர் இரவு நேரத்தில் நடந்து செல்கிறார். போகிற வழியில் இருக்கும் வீடு ஒன்றில் இருந்து பயங்கர சத்தம். வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை போல. மனைவி கணவனை அடிக்க, கணவன் மனைவியிடம் அடிவாங்க என ஒரெ களேபரமான சத்தம். சண்டை போடுறது யாரோ எவரோ என சும்மா போய்விடமுடியவில்லை பாதசாரிக்கு. காரணம், சண்டை நடந்தது பிரிட்டன் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர் வீடு. பிரெக்சிட் பிரச்னையில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலகிவிட்டார். அடுத்த பிரதமராக வரவாய்ப்பிருப்பவர்கள் பட்டியலில் இருக்கும் போரிஸ் ஜான்சன் வீடுதான் அது. போரீஸ் ஜான்சன் ஏற்கெனவே இருமுறை விவாகரத்தனவர். தற்போது தன் காதலி கேரி சைமண்ட்ஸுடன் லிவிங் டுகெதரில் இருக்கிறார்.

Carey - Boris

போரிஸ் அடிவாங்கும் சத்தம் கேட்டு தாங்கமுடியாத அந்த நல்ல குடிமகன, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அடுத்த பிரதமராக வரவேண்டியவர் வீட்டில் தீவிரவாத தாக்குதலோ என்னவோ என நினைத்து பறந்துவந்தது லண்டன் போலீஸ். ஆனால், உள்ளேப் போய் பார்த்தபிறகுதான் அது உள்வீட்டு தீவிரவாதம் என தெரிந்திருக்கிறது. போரிஸ் அசடு வழிந்துகொண்டு நின்றிருக்கிறார். ஒருவழியாக சமாதானம் பேச்சுவார்த்தை பலன் தந்து, சண்டை நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு அமலுக்கு வந்திருக்கிறது.

Boris

நடந்த அத்தனையையும் வீடியோவாக்கி பத்ரிகைகளுக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார் பக்கத்து வீட்டுக்காரர். ஒண்ணுமே தெரியாததுபோல அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்த போரீஸிடம் அலுவலகத்தார் என்ன ஏதென்று விசாரிக்க, சண்டையில கிழியாத சட்ட எங்கயிருக்கு, நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்ட்ட்டேய்ல்லு என சொல்லி அவர்களை ஆஃப் பண்ணிவிட்டார்.