“சண்டையால் உடைந்த மண்டை” – சூடான வாக்குவாதம் முற்றி கிரிக்கெட் மட்டையால் மனைவியை கொலை செய்த கணவன் ….

“சண்டையால் உடைந்த மண்டை” – சூடான வாக்குவாதம் முற்றி கிரிக்கெட் மட்டையால் மனைவியை கொலை செய்த கணவன் ….

ஆந்திராவில் சனிக்கிழமை இரவு நாரசராபேட்டையில் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதத்திற்குப் பின்னர், கிரிக்கெட் மட்டையால் ஒருவர் தனது மனைவியைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
முஸ்தபா மற்றும் ஹயது ன்னிசா என்ற தம்பதியினர்  திருமணமாகி சுமார் 10 ஆண்டுகளாக   சாய் நகர் பகுதியில் தங்கியிருந்தனர்  என்று போலீசார் தெரிவித்தனர்.

ஹயதுன்னிசா பர்ன்பேட்டில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்ததாகவும், முஸ்தபா வேலையில்லாமல் இருந்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முஸ்தபாவுக்கு உதவ ஹயதுன்னிசா பலமுறை முயற்சிகளை மேற்கொண்டதாகவும், கணவருக்கு கார் வாங்க ரூ .2 லட்சம் கடன் வாங்கியதாகவும், இதனால் அவர் ட்ராவல்ஸ்  தொழிலில் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தார் .இருப்பினும், அவர் அதில் இழப்பை சந்தித்தார், அதைத் தொடர்ந்து அவர் காரை விற்றதாக போலீசார் தெரிவித்தனர். 

அடுத்து ஹயதுன்னிசா அவருக்கு ஒரு துணிக்கடை திறக்க  அவருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்தார், ஆனால் அந்த வணிகமும் தோல்வியடைந்தது விளைவாக, உறவு சிதைந்துவிட்டதாகவும், தம்பதியினர் அடிக்கடி சண்டையிடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு, இருவருக்குமிடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து முஸ்தபா, ஆத்திரத்தில், கிரிக்கெட் மட்டையை எடுத்து ஹயதுன்னிசாவை அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

cricket-bat

முஸ்தபா ஆரம்பத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினாலும்  அவர் ஞாயிற்றுக்கிழமை  போலீசில் சரணடைந்தார், மேலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை) இன் கீழ் நர்சரோபேட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நரசராபேட்டை அரசு பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு , மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.