சண்டைக்கோழியாக இருந்த ஹீரோ! சமாதானம் செய்து வைத்த சன் டி.வி!

 

சண்டைக்கோழியாக இருந்த ஹீரோ! சமாதானம் செய்து வைத்த சன் டி.வி!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படம் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படம் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்திலும், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கு இடையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதையடுத்து படத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து #SK16BySunPictures என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Kedi billa killadi ranga

மேலும் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ்  இயக்கத்தில் மெரினா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இவர்களின் கூட்டணி அமைந்தது. அதில் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து இருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் மூலமாக மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.