’சண்டக்கோழி 2’ நாளை ரிலீசாகாது: விஷாலுக்கு செக் வைத்த திரையரங்க உரிமையாளர் சங்கம்!

 

’சண்டக்கோழி 2’ நாளை ரிலீசாகாது: விஷாலுக்கு செக் வைத்த திரையரங்க உரிமையாளர் சங்கம்!

விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தை நாளை ரிலீஸ் செய்யமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை: விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தை நாளை ரிலீஸ் செய்யமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரன், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் நாளை ரிலீசாகிறது. விஷாலின் 25வது படமான ‘சண்டக்கோழி 2’ படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தை தமிழகம் முழுவதும் நாளை ரிலீஸ் செய்யவிடமாட்டோம் என திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைரசிக்கு உதவியதாக தமிழகம் முழுவதும் சுமார் 10 திரையரங்குகளுக்கு இனி எந்த புதிய திரைப்படங்களையும் ரிலீஸ் செய்ய கொடுப்பதில்லை என கடந்த வாரம் விஷால் அதிரடியாக அறிவித்தார். விஷாலின் இந்த அதிரடி முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், அதுவே அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

sandakozhi

விஷாலின் இந்த முடிவுக்கு திருச்சி பகுதியை சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் தகராறில் ஈடுபட, தற்போது தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் மீது விசாரணை இன்றி நடவடிக்கை எடுத்த விஷாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ள நிலையில் இதுபோன்று ஒரு சிக்கல் விஷாலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இருதரப்பினர் இடையே இன்று மாலை பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.