சட்ட விரோதமாகத் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குத் தப்ப முயன்ற 5 அகதிகள் கைது !

 

சட்ட விரோதமாகத் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குத் தப்ப முயன்ற 5 அகதிகள் கைது !

அந்த அகதிகள் இலங்கையின் நடந்த போரின் போது கடந்த 2012 ஆம் ஆண்டு அகதிகளாகத் தமிழகம் வந்ததாகவும், இலங்கையில் தற்போது அமைதி நிலவுவதால் அங்கே மீண்டும் செல்ல முயன்று இங்கே வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடியில் நின்று கொண்டிருந்துள்ளனர். வழக்கமாக அந்த கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் கியூ பிரிவு போலீசார் இவர்கள் நின்று கொண்டிருப்பதையும் படகில் ஏறி எங்கேயோ செல்ல முயல்வதையும் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அதில் ஒரு சிறுவன் உட்பட 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இருந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை அழைத்து கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ttn

அதில் அந்த அகதிகள், தாங்கள் சென்னை மற்றும் திருவள்ளூர் முகாம்களில் இருந்து வருவதாகவும், இலங்கையின் நடந்த போரின் போது கடந்த 2012 ஆம் ஆண்டு அகதிகளாகத் தமிழகம் வந்ததாகவும், இலங்கையில் தற்போது அமைதி நிலவுவதால் அங்கே மீண்டும் செல்ல முயன்று இங்கே வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு வந்த அகதிகள் தங்களது சொந்த தேசத்திற்குத் திரும்பிச் செல்ல பல்வேறு சட்ட முறைகள் இருப்பின், இவர்கள் 5 பேரும் சட்ட விரோதமாகத் தப்பித்துச் செல்ல முயன்றதால் நடுக்கடலில் வைத்து கியூ பிரிவு போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.