சட்ட விதிகளை மீறிச் செயல்பட்ட டாஸ்மாக் : தனி ஆளாக பூட்டுப் போட்டு பேஸ்புக்கில் லைவ் போன பெண்.. மிரண்டு போன ஊழியர்கள்!

 

சட்ட விதிகளை மீறிச் செயல்பட்ட டாஸ்மாக் : தனி ஆளாக பூட்டுப் போட்டு பேஸ்புக்கில் லைவ் போன பெண்.. மிரண்டு போன ஊழியர்கள்!

நேராக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வெளியே பூட்டுப் போட்டுப் பூட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல், அதனை பேஸ்புக்கில் லைவ் போட்டுக் காட்டியுள்ளார்

பட்டாபிராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு எதிரே டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடப்பதை அறிந்த தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கலைச்செல்வி, நேராக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வெளியே பூட்டுப் போட்டுப் பூட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல், அதனை பேஸ்புக்கில் லைவ் போட்டுக் காட்டியுள்ளார். இதனால் அதிர்ந்து போன மற்ற மதுக்கடை ஊழியர்கள் உடனே திறந்திருந்த கடைகளை மூடியுள்ளனர். தனி ஆளாக அந்த பெண் கடைக்குப் பூட்டுப் போட்டது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ttn

இதனையடுத்து கலைச்செல்வி சாவியை எடுத்துக் கொண்டு சென்று எதிரே இருந்த காவல் நிலையத்தில் கொடுத்து விட்டு, டாஸ்மாக் ஊழியர்கள் மீது புகாரும் கொடுத்துள்ளார். அந்த புகாரில், சட்ட விதிகளை மீறி டாஸ்மாக் 24 மணி நேரமும் செயல்படுகிறது என்றும் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் இதனால் இளைஞர்களும் பெரியவர்களும் அதற்கு அடிமையாகி விடுகின்றனர் என்றும் புகார் கொடுத்துள்ளார். மேலும், விடுமுறை நாட்களில் கூட டாஸ்மாக் செயல்படுவதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த டாஸ்மாக் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் அங்குச் சற்று பரபரப்பு நிலவியது.