சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு : சோனியாகாந்தியின் மருமகனுக்கு சம்மன்!

 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு :  சோனியாகாந்தியின் மருமகனுக்கு சம்மன்!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

sonia

கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் 375 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் மூலம் வாங்கியதாகச் சோனியா காந்தியின் மருமகனும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கடந்த நவம்பர் மாதம் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. 

vadra

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவார காலத்திற்குள் அதிகாரி முன் ஆஜராகி விளக்கமளிக்க அதில் கோரப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ராபர்ட் வதேராவை கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.