சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – நீதிமன்றம் உத்தரவு

 

சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவு படி 15% நீரை மக்கள் பயன்பாட்டிற்கு ஆலைகள் ஏன் இலவசமாக வழங்கவில்லை? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வியை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.

சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – நீதிமன்றம் உத்தரவு

அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஏழைகளுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மூடிவிடலாம் என கருத்து தெரிவித்தனர். மேலும், நிலத்தடி நீர் எடுக்கும் அளவை கணக்கிடும் கருவிகள் பொருத்தக் கட்டணம் நிர்ணயிக்க முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக அரசு வரும் 19ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.