சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சி: கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு

 

சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சி: கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு

கேரளாவில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். 

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் முழு அடைப்பும் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில், பல தரப்பட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் சதாசிவம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்டு உத்தரவிட்டார். 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “போராட்டங்களின்போது தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும், சேதமடைந்தால் இழப்பீடு வழங்கவும் வகை செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளோம்.

ஆர்.எஸ்.எஸ்ஸூம், பாஜகவும் கேரளத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயல்கிறது. கேரளத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 92 விழுக்காட்டினர் சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்களாக தான் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் மீதான தாக்குதலும், ஊடகங்கள், வீடுகள், கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதலும் இதில் அடங்கும்” என தெரிவித்துள்ளார்.