சசிகலா அனுப்பிய தூது தான் புகழேந்தி! பயத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ்!

 

சசிகலா அனுப்பிய தூது தான் புகழேந்தி! பயத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ்!

கடந்த சில நாட்களாக அதிமுகவில் நிலவும் மிகப் பெரிய குழப்பம் சசிகலா வெளியே வந்தால் அவரை இணைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா என்பதுதான்

கடந்த சில நாட்களாக அதிமுகவில் நிலவும் மிகப் பெரிய குழப்பம் சசிகலா வெளியே வந்தால் அவரை இணைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா என்பதுதான்.. இத்தகைய சூழலில் அமமுகவின் நிர்வாகியும், சசிகலாவின் உண்மை விசுவாசியான புகழேந்தி முதலமைச்சர் இல்லத்துக்கு திடீர் விசிட் அடித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புகழேந்தி ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்தபோது, கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவர் டிடிவி தினகரனுடன் சேர்ந்து அமமுகவில் இணைந்தார். அவ்வப்போது புகழேந்தி சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திப்பது வழக்கம். 

Pugazhendhi

அமமுக கட்சி நிர்வாகி புகழேந்தி இன்று சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதிமுகவில் இணைவது குறித்து தான் புகழேந்தி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதெல்லாம் இல்லை, புகழேந்தி வந்தது தூது சொல்வதற்காகதான் என்ற தகவலும் கசிய தொடங்கியுள்ளன. அமமுக கட்சியில் அதிருப்தி இருப்பதாகவும், டிடிவி தினகரனால் அனைத்தையும் இழந்து விட்டதாகவும் புகழேந்தி கூறுவது உண்மைதான்… ஆனால் மாமியார் வீட்டிற்கு செல்லும் வழியில் பழனிசாமிக்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன் என புகழேந்தி சொல்வதெல்லாம் பொய்யோ பொய். 

Pugazhendhi

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்திக்கும்போது புகழேந்தி, டிடிவி தினகரன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த சில நாட்களாகவே தன்னிடம் ஒரு ஆதாரம் இருக்கு என புகழேந்தி மிரட்டிவருகிறார். அந்த ஆதாரம் பழனிசாமிக்கு எதிரானதா? அல்லது தினகரனுக்கு எதிரானதா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  அதுமட்டுமின்றி தினகரன் யாரிடமோ விலைக்கு போய்விட்டதாகவும், சசிகலா வெளியே வந்தால் அமமுகவை விரும்ப மாட்டார். அதிமுகவைதான் விரும்புவார் எனக்கூறினார்.

TTV Dinakaran and Sasikala

இதிலிருந்து சிறையிலிருக்கும் சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் இணைவது உறுதி என்பது தெளிவாகியுள்ளது. இதற்கு அதிமுக தலைவர்கள் மறுப்பு சொல்லமாட்டார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை. ஏனெனில் இதுவரை சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என எந்தவொரு அதிமுக தலைவர்களோ சொல்லவில்லை.. இதனால் சசிகலாவை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தில்தான் அதிமுக தலைகள் உள்ளனர். இன்று புகழேந்தியுடன் நடந்த சந்திப்புக்கூட இதுகுறித்துதான் என சொல்லலாம். சசிகலா வெளியே வந்தவுடன் அவரை கட்சியில் இணைப்பது குறித்தும், அவருக்கு வழங்கப்படவுள்ள பதவிக் குறித்துமே இன்றைய சந்திப்பில் புகழேந்தியும் முதலமைச்சரும் விவாதித்ததாக தெரிகிறது.