சசிகலாவுக்கு சொகுசு அறை: நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக அமைச்சர் உறுதி!

 

சசிகலாவுக்கு சொகுசு அறை: நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக அமைச்சர் உறுதி!

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசிகதிகள் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

சென்னை: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசிகதிகள் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். 

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, கடந்த 2017-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்தபோது சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் கூறினார். 

இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு ஒரு குழு அமைத்தது. அந்த விசாரணையில், டி.ஐ.ஜி. ரூபா கூறிய அனைத்து புகார்களும் உண்மை என்றும், சசிகலாவுக்கு 5 அறைகளும், சமையல் கூடமும் ஒதுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல், பரப்பன அக்ரஹாரா சிறையில் எழுந்த புகார் குறித்து விசாரணை குழு அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளது என்றும் இந்த விவகாரத்தில் சசிகலா மீது சட்டப்படியான நடவடிக்கை நிச்சயமாக இருக்கம் என்றும் உறுதியளித்துள்ளார்.