சசிகலாவின் ரூ.160000,00,000 கோடி சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை..!

 

சசிகலாவின் ரூ.160000,00,000 கோடி சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை..!

சசிகலா மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த பெரிய அதிர்ச்சி வைத்தியம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பண மதிப்பிழப்பு நேரத்தில், போயஸ்கார்டனில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து மாற்றச் சொன்னதோடு, அதற்கு ஈடாக அவர்களது சொத்துக்களை தங்கள் பினாமிகளின் பெயருக்கு வாங்கி, ஜெயலலிதாவின் அறையில் ஆவணங்களாக வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு  கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு, சினிமா பானியில் 1200 அதிகாரிகளை தயார் செய்து, சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு, புதுச்சேரி ஆரோவில் உள்ளிட்ட  187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 

sasikala

அதில் ரூ. 1600 கோடி மதிப்பிலான சொத்துகளை முறைகேடாக வாங்கி குவித்திருப்பதும், வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களையும் தங்கள் பெயர்களிலும் வாங்கி குவித்திருந்ததும் அந்த மெகா ரெய்டில் தெரியவந்தது. இந்த ரெய்டு 5 நாட்கள் நடத்தப்பட்டு, நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.sasikala

அதில், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், சென்னையில் உள்ள கங்கா பவுண்டேசன், கோயம்பத்தூர் செந்தில் பேப்பர் நிறுவனம், பாண்டிச்சேரி ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான ரிசார்ட் உள்ளிட்ட 10 கம்பெனிகளை பினாமியாக சசிகலா வாங்கி குவித்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்த நிறுவனங்கள் வேறு ஒருவர்களின் பெயர்களில் இருந்தாலும், வருமானங்கள் எல்லாம் சசிகலாவிற்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதை எல்லாம் உறுதி செய்து கொண்ட வருமான வரித்துறை பணமதிப்பிழப்பின் போது, கோடிகளை கொண்டு சசிகலா பினாமிகளில் பெயர்களில் வாங்கி குவித்த இந்த சொத்துகளை முடக்குவதற்கு முடிவு செய்தது. 

dhinakaran

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பினாமி நிறுவனங்கள் இயங்கி வரும் அந்தந்த சார்பதிவாளர்களுக்கும், நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதனைதொடர்ந்து சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி திருத்த சட்டம் 2017ன்கீழ் அனைத்தையும் அதிகாரிகள் அதிரடியாக நீதிமன்றம் மூலம் முடக்கியுள்ளனர். இந்த தகவல் வருமானவரித்துறை வட்டாரத்திலும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த பெரிய அதிர்ச்சி வைத்தியம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.