சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி!

 

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி!

பஞ்ச பாண்டவர்களும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து விநாயகர் அருள் பெற்று மகாபாரதப் போரில் வென்றார்கள். நினைத்ததை எல்லாம் தரக் கூடிய இந்த விரதத்தை எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?

இன்று 20-6-2019(வியாழக்கிழமை) சங்கடஹர சதுர்த்தி

vinayagar

 

பௌர்ணமியை அடுத்த நான்காவது நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ’சங்கட’ எனும் சொல்லுக்கு ’துன்பம்’ எனப் பொருள். ’ஹர ‘ என்னும் சொல்லுக்கு ‘அழித்தல் ‘எனப் பொருள். அதாவது துன்பங்களை அழிக்கும் நாளே சங்கடஹர சதுர்த்தி. முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்த நாள்  சங்கடஹர சதுர்த்தி. அங்காரகன்(செவ்வாய்) சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தே நவக்கிரகங்களுள் ஒருவராக இருக்கும் பேறு பெற்றார். பஞ்ச பாண்டவர்களும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து விநாயகர் அருள் பெற்று மகாபாரதப் போரில் வென்றார்கள். நினைத்ததை எல்லாம் தரக் கூடிய இந்த விரதத்தை எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?

விரதம் அனுஷ்டிக்கும் முறை:

vinayagar

காலையில் எழுந்து குளித்து வீட்டில் உள்ள விநாயகருக்கு அருகம்புல் வைத்து விளக்கேற்றி அர்ச்சனை செய்து விரதத்தை துவங்க வேண்டும். மாலை வரை  நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம். மாலை வேளையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பிள்ளையாரை தரிசித்து, வேண்டுதல் நிறைவேறுமாறு பிரார்த்தனை செய்து வானில் சந்திர தரிசனம் முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம். நிறைய பேர் கோயிலுக்குச் சென்று இறைவனை மட்டும் தரிசித்து வருவார்கள். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் பொழுது, தரிசனம் முடித்து, வானில் சந்திர தரிசனத்தையும் பார்க்க வேண்டும்.

விரத பலன்கள்:

vinayakar

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.  நமது எல்லா விதமான சங்கடங்களையும் பறந்தோட வைப்பார் விநாயகர்.ஆரோக்கியமான வாழ்க்கை, நீண்ட ஆயுள், குழந்தை வரம் , தொழில் முன்னேற்றம், நன்மதிப்பு, அறிவு, பெருமை, புகழ் அனைத்தையும் அள்ளி கொடுப்பார். அதிலும் குறிப்பாக  சனி தசை நடப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்க்கொண்டால் சங்கடங்களில் இருந்து விடுவித்து நல்ல பலன்களைத் தருவார். நினைத்ததை எல்லாம் நிறைவேற்றித்தரும் இந்த சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை நாமும் அனுஷ்டித்து சகல நன்மைகளையும் அடையலாம்.