சகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள்: அதிமுக வேட்பாளர் சின்னப்பன்

 

சகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள்: அதிமுக வேட்பாளர் சின்னப்பன்

அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக எம்பி கனிமொழிக்கு வாக்களிக்குமாறு மாற்றி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக எம்பி கனிமொழிக்கு வாக்களிக்குமாறு மாற்றி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் எங்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும், இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் போட்டியிடுகிறார்.

chinna

விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பிருந்து சின்னப்பன் தன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். அங்கே அதிமுக, பாஜக தொண்டர்கள் என மக்கள் அதிகமாக திரண்டிருந்தனர். இடைத்தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள் என தவறுதலாக கூறிவிட்டார்.

 

இந்த பேச்சு மக்கள் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட சின்னப்பன், பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசைக்கு வாக்களியுங்கள் என்றார்.