சகல தோஷங்களையும் போக்கும் கருடதரிசனம் | இன்று இரவு ஆடி சுவாதி பூஜை 

 

சகல தோஷங்களையும் போக்கும் கருடதரிசனம் | இன்று இரவு ஆடி சுவாதி பூஜை 

இன்று ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திரம், ஆடி சுவாதியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் இரவில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், சேரமான் நாயனார் குருபூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. சேரமான் நாயனார், சுந்தரர் ஆகியோரின் குருபூஜை நாளாக ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.  

சகல தோஷங்களையும் போக்கும் கருடதரிசனம் | இன்று இரவு ஆடி சுவாதி பூஜை 

இன்று ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திரம், ஆடி சுவாதியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் இரவில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், சேரமான் நாயனார் குருபூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. சேரமான் நாயனார், சுந்தரர் ஆகியோரின் குருபூஜை நாளாக ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் நாயனார், தான் இயற்றிய ‘திருக்கயிலாய ஞான உலா’ எனும் நூலை தன்னுடைய நண்பரான சுந்தரருடன் யானையிலேறி திருக்கயிலாயம் சென்று ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திர நாளில் சிவனாரின் திருப்பாதங்களை இருவரும் சரணடைந்தனர் என்கிறது புராணம். ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் சேரமான் நாயனாருக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் உருவத்தில் காட்சி கொடுத்தார் என்றும் புராணம் சொல்கிறது.

அதே போல் இந்த ஆடி சுவாதி நட்சத்திர நாளில் தான் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், நாச்சியார்கோயில்,  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் போன்ற அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். 
கருடாழ்வார் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மையும் பெற்றிருக்கிறார். சுவாதி நட்சத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலா ராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலட்சுமியின் அம்சமாகவும் விளங்குகிறார். சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது. 
ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நட்சத்திரங்களிலும்,  கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள் இன்று கருடனை தரிசித்து பலனடையலாம். 
ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புன்னியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு, கேது அமைய பெற்றவர்களுக்கு இன்றைய கருட தரிசனம் அபரிமிதமான பலன்களைக் கொடுக்கும். 

ராகுவை ஆத்ம காரகனாக கொண்டவர்களுக்கும் சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்க்கை பெற்றவர்களுக்கும் கருட தரிசனம் வாழ்நாள் முழுவதும் பலன்களைத் தரும். 
கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள் தவறாமல் ஆலயங்களுக்குச் சென்று கருட தரிசனம் செய்ய வேண்டும். 
பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்களுக்கு கருட தரிசனம் மேற்கொண்டால் நல்ல காலம் பிறக்கும்.
கோசார ராகு, கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள் கருட தரிசனம் மேற்கொள்ளலாம்.
ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன், கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்களுக்கு கருட தரிசனம் பலன் தரும்.
கருடாழ்வாரை தரிசிக்கும்போது, 
‘குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:’ என கூறி வணங்க வேண்டும். பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.