கோவை தொழிலதிபர் மகளுடன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம்!

 

கோவை தொழிலதிபர் மகளுடன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம்!

அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்தபோதே ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார்

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்தபோதே ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார் அவரது அரசியல் வாரிசு விஜய பிரபாகரன்.

ttn

போகும் இடங்களில் வயசுக்கு ஏற்ற மாதிரி சில வார்த்தைகளை விட்டாலும் அவரது பேச்சில் அப்பாவைப் போலவே அதிரடி காட்டுகிறார். கட்சி நடவடிக்கைகளில் தலைகாட்டி வரும் இவர், திரைப்படங்களில் நடிப்பதையும் ஆர்வமுடன் செய்து வருகிறார். 

ttn

இந்நிலையில்  விஜய பிரபாகரனுக்கும் கோவை – பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ttn

மிக எளிமையாக நடைபெற்ற  விழாவில்  குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து  கொண்டது குறிப்பிடத்தக்கது