கோவையில் மூன்றாவது ஆண்டாக களைக்கட்டும் ஜல்லிக்கட்டு !

 

கோவையில் மூன்றாவது ஆண்டாக களைக்கட்டும் ஜல்லிக்கட்டு !

கடந்த மாதம் 16 ஆம் தேதி  மாட்டுப்பொங்கல் தினத்திலிருந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 16 ஆம் தேதி  மாட்டுப்பொங்கல் தினத்திலிருந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு,  அவனியாபுரம் பகுதிகளில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதே போலக் கோவையில் செட்டிப்பாளையத்திலும் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பலர் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். அதே போல, மூன்றாவது ஆண்டாக இன்று நடைபெறும் போட்டியை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார். 

ttn

இந்த போட்டியில் வாடிவாசல் வழியாகத் திறந்து விடப்படும் காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்து வருகின்றன. அதனை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், டூ வீலர், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பல மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.