கோவையில் புதிதாய் உருவாகும் ‘கூவம்’! அரசு அதிகாரிகள் மும்முரம்!

கோவையில் புதிதாய் உருவாகும் ‘கூவம்’! அரசு அதிகாரிகள் மும்முரம்!

ஒரு பக்கம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை மிச்சம் வையுங்க என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம், லஞ்சம் வாங்கிக் கொண்டு தனியார் ஆலைகளுக்கு, கழிவுகளை ஆற்றில் கலக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் தவித்து கேரளாவையும், கர்நாடகாவையும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் இப்படி கழிவுகளால் கற்பழிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஆரம்பித்து வற்றாத ஜீவ ஊற்றாய் ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் ஆறு இப்படித் தான் இப்போது பாழ்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட மக்கள் விழித்துக் கொண்டால் தான் இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும் போல. தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வந்து கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் வருகிற நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர்  அதிகளவில் கலந்து விடுகிறது. இதனோடு சேர்ந்து அரசு அதிகாரிகளின் அலட்சியத்தினால் சாக்கடை கழிவுநீரும் நுரையுடன் நொய்யல் ஆற்றில் கலந்து விடுகிறது.

neithal

அரசு அதிகாரிகளும், முறையான பராமரிப்பு இல்லாத தனியார் நிறுவன ஆலை முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு கோவையில் புதிதாய் நொய்யல் ஆற்றை ‘கூவமாய்’ மாற்றுகிற முனைப்பில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.  வெள்ளை வெளேர் என்று பளிங்கு கண்ணாடியாய் இருந்த நொய்யல் ஆறு, கருமை நிறம் போர்த்தி, களையிழந்து வாயில் நுரைகள் தள்ளி, தள்ளாடி தவழ்ந்து வருகிறது. 

neithal

தங்களின் வாழ்வியல் ஆதாரமான நொய்யல் ஆறு, கண்ணெதிரே நுரை தள்ளி தள்ளாடுவதைப் பார்த்து பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆற்றின் கரையோரங்களில் இயற்கை சூழ சாலையில் வலம் வந்தவர்கள், இப்போது வாகனங்களில் சாலையைக் கடக்கையிலும் காற்றில் பறந்து வரும் நுரை கலந்த சாக்கடை கழிவுநீரின் அபிஷேகத்திற்கு ஆளாகிறார்கள். 
இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள், வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நமக்கென்ன.. நொய்யல் ஆறு கோவையில் தானே ஓடுகிறது.. நாம் அத்தி வரதரின் சயன் கோலத்தைக் கண்டு களித்தது போலவே நின்ற கோலத்தையும் தரிசித்து விட்டு, சாவகாசமாய் முகநூலில் நொய்யல் ஆற்றின் அபல நிலையைப் பற்றி ஒரு பதிவு எழுதி வைப்போம்.