கோவையில் உச்சக்கட்ட சிகிச்சை..! கொரோனா பாதிக்கப்பட்ட 141 பேரில் 132 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர்

கோவையில் உச்சக்கட்ட சிகிச்சை..! கொரோனா பாதிக்கப்பட்ட 141 பேரில் 132 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32லட்சத்தை கடந்துள்ளது. இரண்டு லட்சம் 28ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில்  இன்று வரை 2,323பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் கோவையில் 141 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 132 பேர் குணமடைந்துள்ளனர். கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 6 பேரும்; ஈ.எஸ்.ஐ யில் 3 பேர் என மொத்தம் 9 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதைத்தவிர, ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 12 பேர்  இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடந்த 23 ஆம் தேதிக்கு பிறகு, கோவையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடதக்கது.