கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்ற 13 பேர் கைது!

 

கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்ற 13 பேர் கைது!

சுந்தர்ராஜ், சாமிநாதன், ஹரி, பிரபு, மற்றும் கஜேந்திரன் உள்ளிட்ட 5 முக்கிய குற்றவாளிகள் தப்பிவிட்டனர். இவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கழிவறைக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை, அன்னூரில் ஆன்லைன் லாட்டரி விற்பனை களைகட்டுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அன்னூர், செல்லப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அங்கு, ஆன்லைன் லாட்டரி விற்பதும், லட்சக்கணக்கில் பணம் புழங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய், 3 எலெக்ட்ரானிக் மிஷின்கள், 10 டூவீலர்கள், மினி ஆட்டோ முதலியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Seized property from arrested

சுந்தர்ராஜ், சாமிநாதன், ஹரி, பிரபு, மற்றும் கஜேந்திரன் உள்ளிட்ட 5 முக்கிய குற்றவாளிகள் தப்பிவிட்டனர். இவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கழிவறைக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்ந்தால், கடும் நடவடிக்கை தொடரும் என கோவை மாவட்ட எஸ்.பி.சுஜித் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.