கோவைக்காய் துவையல் செய்து,சூடான சாதத்துல போட்டு சாப்பிட்ருக்கீங்களா!?

கோவைக்காய் துவையல் செய்து,சூடான சாதத்துல போட்டு சாப்பிட்ருக்கீங்களா!?

20 மில்லி கோவை இலைச்சாற்றுடன் அதே அளவு நல்லலெண்ணை சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெட்டை நோய் தீரும். இது தவிர,கோவைக்காயை குறுக்கு வாக்கில் சின்னச்சின்ன வட்டங்களாக வெட்டி உப்புச் சேர்த்து மோரில் ஊறவைத்து வெய்யிலில் காயவைத்து வைத்துக் கொண்டு வற்றலாக பொரித்து சாப்பிடலாம். இவ்வளவுதான் நமக்கு தெரிந்தது ஆந்திரத்தில் கோவைக்காயில் ஒரு சுவையான துவையல் செய்கிறார்கள். அதற்கு பெயர் ‘தொண்டைக்காய் பச்சிடி’!கோவைக்காய் துவையல் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

கோவைக்காய் தமிழகமெங்கும்,வேலிகளிலும்,மரங்களிலும் பின்னிப் படர்ந்து சென்னிற பழங்களுடன் கேட்பாரற்று இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதை படித்துவிட்டால் இனி கோவையை எங்கே பார்த்தாலும் விடமாட்டீர்கள். கோவை கொடியின் வேர்முதல் காய்வரை அனைத்தும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்த கூடியவை.

கோவையின் வேரில் கிழங்கு இருக்கும்,இந்தக் கிழங்கின் சாரெடுத்து தினமும் 10 மில்லி அளவு பருகிவர ஆஸ்துமா மட்டுப்படும்.கோவை இலையின் சாறு சீதபேதிக்கு மருந்தாகும்.கோவைச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி சிரங்கு,படை போன்ற தோல் நோய்க்கு மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம்.

kova

20 மில்லி கோவை இலைச்சாற்றுடன் அதே அளவு நல்லலெண்ணை சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெட்டை நோய் தீரும். இது தவிர,கோவைக்காயை குறுக்கு வாக்கில் சின்னச்சின்ன வட்டங்களாக வெட்டி உப்புச் சேர்த்து மோரில் ஊறவைத்து வெய்யிலில் காயவைத்து வைத்துக் கொண்டு வற்றலாக பொரித்து சாப்பிடலாம். இவ்வளவுதான் நமக்கு தெரிந்தது ஆந்திரத்தில் கோவைக்காயில் ஒரு சுவையான துவையல் செய்கிறார்கள். அதற்கு பெயர் ‘தொண்டைக்காய் பச்சிடி’!கோவைக்காய் துவையல் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தேவையானது இவ்வளவுதான்

kov

கோவைக்காய் ¼ கிலோ

தேங்காய் ¼ மூடி

காய்ந்த வரமிளகாய் 5

பூண்டு பற்கள் 3

பெரிய வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

கோவைக்காயை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள், அனைத்து பொருட்களையும் கடலை எண்ணெய்யில் வதக்கி ஆறவைத்து,மிக்சியில் போட்டு ,கொஞ்சமாக புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுங்கள்,சூடான சோற்றின் மீது உங்கள் மனம்போல துவையலை போட்டு,ஒரு ஸ்பூன் நெய்விட்டு சாப்பிட்டு பாருங்கள், உங்கள் ஏரியாவில் ஒரு கோவைக்காயைக்கூட விட்டுவைக்க மாட்டீர்கள்.

இதையும் படிங்க: கோடைக்கால ஸ்பெஷல்: 2 வாழைத்தண்டு போல உடம்பு வேண்டுமா? அதற்கு வழிகாட்டியும் அதுவே தான்!