கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்க்கை நடத்தும் கலைஞர்களின் பசியாற்ற உதவுங்கள் – கமல்ஹாசன்

 

கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்க்கை நடத்தும் கலைஞர்களின் பசியாற்ற உதவுங்கள் – கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 930ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 930ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை போன்று பெஃப்சியில் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மொத்தம் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நடிகர்கள் தங்களாலான உதவிகளையும்,நிதியுதவிகளையும் வழங்கிவருகின்றனர்.

 

 

இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள்.அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில்,அவர்களும் கவலையின்றி பசியாறுவர்” என தெரிவித்துள்ளார்.