கோவிட்-19 எதிரான மத்திய அரசின் போராட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி கொடுங்க… நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதிய துணை குடியரசு தலைவர்….

 

கோவிட்-19 எதிரான மத்திய அரசின் போராட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி கொடுங்க… நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதிய துணை குடியரசு தலைவர்….

கோவிட்-19க்கு எதிரான மத்திய அரசின் போராட்டத்துக்கு, குறைந்த பட்சம் ரூ.1 கோடியை தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார். இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான மத்திய அரசின் போராட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி வழங்கும்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கோவிட்-19ஐ வெற்றிகரமாக எதிர்த்து போராட நிதி, பொருள் மற்றும் மனித உள்பட ஏராளமான வளங்கள் தேவை. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவுகளில் அதிக நிதி கிடைப்பதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் நிதி திரட்டுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உடனடி நடவடிக்கை கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு பெரிதும் உதவும்.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்ட நிதி

மேலும், கோவிட்-19க்கு எதிரான மத்திய அரசின் போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது 2020-21ம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்டத்துக்கு (MPLADS) ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து குறைந்தபட்சம் ரூ.1 கோடியாவது பங்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.