கோவா போன்று புதுவையிலும் சூதாட்ட விடுதி ! முதல்வர் அறிவிப்புக்கு ஆளுநர் எதிர்ப்பு !

 

கோவா போன்று புதுவையிலும் சூதாட்ட விடுதி ! முதல்வர் அறிவிப்புக்கு ஆளுநர் எதிர்ப்பு !

புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் எப்போதுமே பனிப்போர் நிலவும். முதலமைச்சர் சொல்வதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பார். ஆளுநர் சொல்வதை முதல்வர் ஏற்க மறுப்பார். இப்படியே அங்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கேசினோ கொண்டுவரப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எப்படி எடுத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யூனியின் பிரதேசங்களில் மனித வள மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு, நீதி நிர்வாகம், மருத்துவம் ஆகிய 4 துறைகளில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது

சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் விதிமுறைகளுடன் கேசினோ கொண்டு வரப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

casino

புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவைகளை நிறைவேற்ற அதற்கான விதிமுறைகள் வகுப்படும் எனவும் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி.
புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் எப்போதுமே பனிப்போர் நிலவும். முதலமைச்சர் சொல்வதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பார். ஆளுநர் சொல்வதை முதல்வர் ஏற்க மறுப்பார். இப்படியே அங்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கேசினோ கொண்டுவரப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எப்படி எடுத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யூனியின் பிரதேசங்களில் மனித வள மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு, நீதி நிர்வாகம், மருத்துவம் ஆகிய 4 துறைகளில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. விவசாயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டால் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெறுவோம். கிரண்பேடி அம்மையார் அவர்கள் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் நாங்கள் சாதனைகளை செய்வோம்’ என்றும் நாராயணசாமி பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள கிரண்பேடி, புதுச்சேரியை சூதாடும் இடமாகவும், மது போதைக்கு உட்பட்ட இடமாகவும் மாற்றப் பார்ப்பதாகவும்,  புதுச்சேரி பாதுகாப்புடன் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

kiran bedi post

கிரண்பேடியின் இந்த கருத்துக்கு பதில் தந்துள்ள நாராயணசாமி, கோவாவில் கேசினோ இருக்கிறது. அங்குள்ள பாஜக அரசிடம் கேசினோவை மூட சொல்வாரா கிரண்பேடி அவர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூர், கோவா போன்ற பெரு நகரங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களில் மட்டுமே வெளிநாட்டு விளையாட்டான ராயல் கேசினோ விளையாடப்படுகிறது. இவ்வகை விளையாட்டுகள் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடும் மிக அதி செலவீனமான விடுதியாக இருக்கும்.

 

மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை, சுய தொழிலில் ஏற்படுகின்ற சிரமங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றால் குறுகிய காலத்தில் அதிக பணத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான மக்கள் உழல்கின்றனர். சூதாட்டமும் அதற்கேற்றால் போல் புது வருகையாளர்களுக்கு சில நாட்கள் பணத்தை அள்ளித் தரும்.