கோவா திரைப்பட விழாவில் இளையராஜா… ஆனால் சென்னையிலிருந்து நேரலை!

 

கோவா திரைப்பட விழாவில்  இளையராஜா… ஆனால்  சென்னையிலிருந்து நேரலை!

நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி வைக்கிறார். இதில்  நடிகர் ரஜினிக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி” விருது வழங்கப்படுகிறது. 

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 50 ஆவது ஆண்டு என்பதால் பொன்  விழா ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது. இவரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இதன் தொடக்க விழாவை நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி வைக்கிறார். இதில்  நடிகர் ரஜினிக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி” விருது வழங்கப்படுகிறது. 

ilaiyaraja

இந்நிலையில்  50 ஆவது சர்வதேச திரைப்பட விழா நிகழ்வில்  இளையராஜாவின் பங்கெடுப்பும் இருக்க போகிறதாம்.  அதாவது இசைஞானி  இளையராஜாவின் நேரலை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்  அது சென்னையில் இருந்து நேரலை செய்யப்படுகிறதாம்.

ilaiyaraja

வரும் நவம்பர்  27 ஆம் தேதி மாலை  6 மணிக்கு 9 பேர் கொண்ட தனது குழுவுடன் சென்னையிலிருந்து  இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைஞானி. இதுவரை இளையராஜா பல தேசிய மற்றும் சர்வதேச அரங்கங்களில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார், ஆனால் அவர் இதுவரை திரைப்பட விழாக்களில் நேரலை நிகழ்ச்சியை நடத்தவில்லை. இதுவே முதல்முறை. இவர் விழாவில் எல்லா மொழி பாடல்களையும் தேர்ந்தெடுத்து  ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.