கோவக்காய் சாலட் தெரியுமா?! டேஸ்டியான கேரள ரெசிபி!

 

கோவக்காய் சாலட் தெரியுமா?! டேஸ்டியான கேரள ரெசிபி!

கோவக்காயை வைத்து  பொரியல், கூட்டு, என்று செய்து சாப்பிட்டிருப்போம். சாலட் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..?  நம்ம ஊரில் இந்த சாலட் அதிகம் செய்வதில்லை என்றாலும் கேரளாவில் பாரம்பரிய உணவு ஐட்டங்களில் இதுவும் ஒன்று.பொதுவாக கோவைக்காயில் உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது

கோவக்காயை வைத்து  பொரியல், கூட்டு, என்று செய்து சாப்பிட்டிருப்போம். சாலட் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..?  நம்ம ஊரில் இந்த சாலட் அதிகம் செய்வதில்லை என்றாலும் கேரளாவில் பாரம்பரிய உணவு ஐட்டங்களில் இதுவும் ஒன்று.பொதுவாக கோவைக்காயில் உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது.ஆனாலும் அதை பொரியலாக செய்யும் போது அதிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.அதனால் இது போல் சாலட் செய்து சாப்பிட்டால் நல்ல டேஸ்ட்டாகவும் இருக்கும் சத்துக்களும் அப்படியே முழுமையாக கிடைக்கும்.

salad

தேவையான பொருட்கள்

கோவக்காய் -250கி 
பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லி – 1 கொத்து 
பச்சை மாங்காய் – 1
புதினா – 1 கொத்து 
கிரீம் சீஸ் – 2 ஸ்பூன் 
பூண்டு – 2 பள்ளு 
மயோனிஸ் 1 ஸ்பூன் 
மாதுளை – 1 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

முதலில் கோவைக்காயை  நீளவாக்கில் சிறு சிறு  துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸரில் மாங்காய்,பச்சை மிளகாய், மயோனிஸ், கொத்துமல்லி,புதினா,பூண்டு,கிரீம் சீஸ்,உப்பு ஆகியவைகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.பின் இந்த கலவையை வெட்டி வைத்துள்ள கோவைக்காயில் சேர்த்து நன்றாக கலக்கவும்.இதில் மாதுளம் பழத்தின் விதைகளை சேர்த்து தூவி விட்டால் சாலட் ரெடி.