கோழித் தொடைக் கறியை விட நெஞ்சு பகுதி சிறந்தது ஏன் தெரியுமா?

 

கோழித் தொடைக் கறியை விட நெஞ்சு பகுதி சிறந்தது ஏன் தெரியுமா?

சிக்கன் எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதிலும் டிரம்ஸ்டிக் எனப்படும் தொடைப்பகுதியை கடித்து சாப்பிடுவதில் அலாதி ஆர்வம். கடைக்கு போனால் லெக் பீஸாக வாங்கி வந்து பொரித்தெடுத்துச் சாப்பிடுபவர்கள் அதிகம். கோழி இறைச்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கலோரி அளவு இருக்கிறது என்பது தெரியுமா?

கோழித் தொடைக் கறியை விட நெஞ்சு பகுதி சிறந்தது ஏன் தெரியுமா?

அமெரிக்கர்களுக்கு கோழி இறைச்சியில் நெஞ்சு பகுதிதான் அதிகம் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இந்தியர்களுக்கு லெக் பீஸ்தான் பிடிக்கும். லெக் பீஸை அமெரிக்கர்கள் தொடமாட்டார்கள் என்று கூடச் சொல்வார்கள்.

100 கிராம் கோழியின் நெஞ்சு பகுதி இறைச்சியில் 114 கலோரி உள்ளது. 21 கிராம் புரதமும், 3 கிராம் கொழுப்பும் உள்ளது.

100 கிராம் கோழியின் டிரம்ஸ்டிக் பகுதியில் இருந்து 161 கலோரி கிடைக்கிறது. புரதச்சத்து 19 கிராமும், கொழுப்பு 9 கிராமும் உள்ளது. ஒரே ஒரு தொடை பகுதியை எடுத்துக்கொண்டாலும் குறைந்தது 109 கலோரியாவது இருக்கும். நம் ஊரில் கோழி இறைச்சி என்றால் எல்லாமே ஒன்றுதான். ஆனால் அமெரிக்க போன்ற நாடுகளில் ஒவ்வொரு பகுதியும் பிரித்து விற்பனை செய்வார்கள். கோழியின் நெஞ்சு பகுதியை விட தொடை பகுதி விலை குறைவாகவே விற்கப்படுகிறது.

கோழியின் டிரம்ஸ்டிக் பகுதிக்கு மேல் உள்ள தொடைப் பகுதியில் 119 கலோரி உள்ளது. 20 கிராம் புரதமும், 4 கிராம் கொழுப்பும் உள்ளது.

பலருக்கும் பிடித்த விங்ஸ் எனப்படும் கைப் பகுதியில் 222 கலோரி உள்ளது. 18 கிராம் புரதமும், 16 கிராம் கொழுப்பும் உள்ளது.

இவற்றை எல்லாம் விட கோழியின் தோலில் அதிக கலோரி உள்ளது. 100 கிராம் கோழி தோலில் 190 – 200 அளவுக்கு கலோரி உள்ளது. புரதம் 28 கிராமும், கொழுப்பு 7 கிராமும் உள்ளது. கோழி இறைச்சியைத் தோல் நீக்கி சாப்பிடுவதைக் காட்டிலும், தோலுடன் சாப்பிடும் போது கூடுதலா 100 கலோரி கிடைக்கும்.

மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் கோழியில் கலோரியும் குறைவு, கொழுப்பும் குறைவுதான். அதை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. எண்ணெய் அதிகம் விட்டு பொரித்து, வறுத்துச் சாப்பிடுவது கூடுதல் கலோரி மற்றும் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்துவிடும்!