கோல்மால் செய்து பணம் சம்பாதிப்பதாக ஜியோ மீது ஏர்டெல் பாய்ச்சல்

 

கோல்மால் செய்து பணம் சம்பாதிப்பதாக ஜியோ மீது ஏர்டெல் பாய்ச்சல்

இன்கமிங்கிலும் பைசா பெறுவதற்கு நூதனமுறை கையாளும் ஜியோ.மற்ற நெட்வொர்க்கில் இருந்து ஜியோவுக்கு வரும் அழைப்புகளுக்கான ரிங் 20 வினாடிகள் மட்டுமே வைத்திருப்பதாக ஜியோ நிறுவனம் மீது ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.

இன்கமிங்கிலும் பைசா பெறுவதற்கு நூதனமுறை கையாளும் ஜியோ.மற்ற நெட்வொர்க்கில் இருந்து ஜியோவுக்கு வரும் அழைப்புகளுக்கான ரிங் 20 வினாடிகள் மட்டுமே வைத்திருப்பதாக ஜியோ நிறுவனம் மீது ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.

call

பொதுவாக எல்லா நெட்வொர்க்கிலும் கால் செய்யும்போது இன்கமிங் ரிங் சவுண்டு 45 வினாடிகள் ஒலிக்கும். அதனால் வாடிக்கையாளர்கள் வாகனங்களில் செல்லும்போதோ அல்லது முக்கியமான வேலைகளில் இருக்கும்போதோ செல்போனை எடுப்பதற்கு அவகாசம் இருக்கும். ஆனால் ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் அழைக்கும்போது 20 வினாடிகள் மட்டுமே ரிங் ஒலிக்கும். பின்னர் வாடிக்கையாளர்கள் யார் போன் செய்தார்களோ அவருக்கு போன் செய்துபேசுவர். இதனால் இன்கமிங் கால்கள் செயற்கை முறையில் அவுட்கோயிங் கால்களாக மாற்றப்படுகிறது. சரி இதனால் என்ன பிரச்சனை எல்லாமே அன்லிமிடெட் அழைப்புகள்தானே என்று கேட்கிறீர்களா? அது நமக்கு மட்டும்தான். செல்போன் நிறுவனங்களை பொறுத்தவரை ஒரு நிறுவனத்திற்கு வரும் இன்கமிங் கால்களுக்கு ஐயுசி கட்டணமாக எந்த நெட்வொர்க்கில் இருந்து அழைப்பு வருகிறதோ அந்த நெட்வொர்க்கிற்கு 6 பைசா செலுத்தவேண்டும். 20 வினாடிகள் ரிங் என்பதால் கிட்டதட்ட 30 சதவீத மிஸ்டுகால் கால் மூலம் செய்யப்படும் அழைப்புகளால் 6 பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது. இதனால் 65 சதவீத டெலிகாம் டிராபிக்கை தன் வசம் ஜியோ வைத்திருப்பதாக ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.

jio

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜியோ உலக அளவில் 20 நொடிகள்தான் இன்கமிங் ரிங் ஒலி வைக்கப்படுவதாகவும் இந்தியாவில் மட்டும்தான் 30 நொடிகள் கடைப்பிடிப்பதாகவும் கூறுகிறது. பொதுவாகவே 30 சதவீத அழைப்புகள் ஜியோவுக்கு மிஸ்டுகால்களாகத்தான் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது