கோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..!

 

கோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..!

முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

INDVS SA

தென்னாபிரிக்காவின் துவக்க வீரர் ஹென்ரிக்ஸ்(6) தீபக் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டி காக் மற்றும் பவுமா இருவரும் அணிக்கு ரன் சேர்த்தனர். பவுமா (49) தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

மறுமுனையில், டி காக் அரைசதம் அடித்தவுடன் 52 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன் அடிக்கத்தால், தென்னாபிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி துவக்க வீரர் ரோஹித் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 40 ரன்கள் எடுத்து சஸ்மி பந்தில் வெளியேறினார்.

kolhi

கேப்டன் விராட் கோலி வழக்கம்போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கண்டார். பண்ட் அடிக்க முயற்சித்து 4 ரன்களுக்கு வெளியேற இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (16), கோலி (72) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது.

கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக  தேர்வு செய்யப்பட்டார்.