கோலாகலமாக நடக்கவிருக்கும் கார்த்திகை தீப திருவிழா : உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

 

கோலாகலமாக நடக்கவிருக்கும் கார்த்திகை தீப திருவிழா : உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  !

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இதில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இதில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதனைக் காண பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர். இந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

TTN

 கடந்த 1 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான மகா தீபதிருவிழா 10ம் நாளான வருகிற 10ம் தேதி  நடைபெறுகிறது. அன்று மாலை  6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

TTN

தீபதிருவிழாவன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேரமராக்கள் பொருத்தும் பணி  மேற்கொள்ளப்படுகிறது. ஆயிரக்  கணக்கான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், தீப திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், அதற்குப் பதிலாக வரும் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.