கோலாகலமாக தொடங்கிய அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

 

கோலாகலமாக தொடங்கிய அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை இன்று தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக சுமார் 1 லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பை அந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்குவது நம்மவர்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் அதிரடி தள்ளுபடியும் இதற்கு முக்கிய காரணம். இந்திய ஆன்லைன் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதில் கடும் போட்டி போடுகின்றன. எல்லா நாட்களிலும் ஆன்லைன் வாயிலாக பொருட்கள் விற்பனை நடக்கும் என்றாலும் பண்டிகை காலத்தில் ஆன்லைன் விற்பனை படுஜோராக இருக்கும்.

ஆன்லைன் வர்த்தகம்

இந்நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை இன்று தொடங்கியது.  இதற்காக பல மாதங்களுக்கு முன்பே அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் தயாராகி வந்தன. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் நோக்கில் அனைத்து பிரிவுகளிலும் சுமார் 90 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புக்களை அமேசானும், பிளிப்கார்ட் நிறுவனம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பும்  வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை

சிறப்பு விற்பனையை முன்னிட்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களில் பணியாளர்கள் போர் களத்தில் இருப்பது போல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இலவச உணவு மற்றும் குறைந்த நேரம் ஓய்வு என்று அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணியாளர்கள் பம்பரமாக பணியாற்றி வருகின்றனர். அக்டோபர் 4ம் தேதி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை நிறைவடைகிறது.