கோலமிட்டு மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரை மக்கள்

 

கோலமிட்டு மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரை மக்கள்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் மோடிக்கு #Gobackmodi என கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் மோடிக்கு #Gobackmodi என கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

விவசாயிகள் பிரச்சனை, நீட் பிரச்சனை என பல்வேறு சமூக பிரச்சனைகளில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது மத்திய அரசாங்கம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க கூட பிரதமர் மோடி வரவில்லை. இந்நிலையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமருக்கு தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Gobackmodi என்ற ஹாஸ்டாக்கின் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கார்டூன்கள், மீம்கள் என சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் சிலர் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு #Gobackmodi என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.