கோலமிட்டு குப்பைக் கொட்டுவதை தடுக்கும் புதிய முயற்சி: கோவை மாநகராட்சி அதிரடி!

 

கோலமிட்டு குப்பைக் கொட்டுவதை தடுக்கும் புதிய முயற்சி: கோவை மாநகராட்சி அதிரடி!

தெருக்களில் குப்பைகள் கொட்டுமிடத்தில் கோலமிடுகின்றனர். அதனால் அங்குள்ள மக்கள் குப்பையை மாநகராட்சி வைக்கும் குப்பைத் தொட்டியில் தான் கொட்ட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் குப்பை ஆங்காங்கே சாலைகளிலும் தெருக்களிலும் குப்பையை கொட்டுகின்றனர். அரசு எத்தனையோ முறை அதனை தடுக்க முயற்சி செய்து அனைத்து கட்ட முயற்சியும் பெரும்பாலாக தோல்வியிலேயே முடிகிறது. மக்களிடம் போதிய விழ்ப்புணர்ச்சியும், போதிய நடவடிக்கையும் எடுக்க படாததுமே இதற்கு காரணம். 

Kolam in garbage dumping areas

குப்பையை கண்ட இடங்களில் கொட்டுவதால் அதல் இருந்து வரும் கொசுக்களும், துர்நாற்றமும் மக்களுக்கு கொடிய நோய்களை உருவாக்குகின்றன. கோவையில், இத்தகைய செயல்களை தடுப்பதற்காக புதியதொரு  அதிரடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர். 

மக்கள் பலர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதன் பேரில், தெருக்களில் குப்பைகள் கொட்டுமிடத்தில் கோலமிடுகின்றனர். அதனால் அங்குள்ள மக்கள் குப்பையை மாநகராட்சி வைக்கும் குப்பைத் தொட்டியில் தான் கொட்ட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புது முயற்சி கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் செயல் படுத்தப் பட்டு வெற்றியையும் கண்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.