கோர்ட் வளாகத்திற்குள் சரக்கு, துப்பாக்கியை ஆட்டைய போட்ட பேட்டரி திருடன் கைது

 

கோர்ட் வளாகத்திற்குள் சரக்கு, துப்பாக்கியை ஆட்டைய போட்ட பேட்டரி திருடன் கைது

அம்பத்தூர் பழைய கோர்ட் வளாகத்தில் புகுந்து பீர் மற்றும் துப்பாக்கி ஒன்றை திருடியுள்ளான் பாபு எனும் இளைஞன். துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த அவனை காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: அம்பத்தூர் பழைய கோர்ட் வளாகத்தில் புகுந்து பீர் மற்றும் துப்பாக்கி ஒன்றை திருடியுள்ளான் பாபு எனும் இளைஞன். துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த அவனை காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அம்பத்தூர் பழைய கோர்ட் வளாகத்தில் உலவிக்கொண்டு இருந்த பேட்டரி திருடன்.வயது 19 , காமராஜபுரம் பெரியார் தெரு.சாசி. கடந்த வாரம்தான் புழலில் இருந்து வெளியே வந்திருக்கிறான்.அடுத்த வேட்டை குறித்து சிந்தித்தபடியே நடந்த பாபுவை எங்கிருந்தோ வந்த ‘சரக்கு’ வாசனை வா வா என்று அழைத்தது.

பாபு அதை மோப்பம் பிடித்துக்கொண்டு போனான்.அது கோர்ட் வளாகத்துக்கு உள்ளேயே இருந்த ஒரு குடோனுக்கு அழைத்துப் போனது.அதன் உடைந்த ஜன்னல் வழியாகத்தான் மது வாடை வந்தது.உள்ளே எட்டிப்பார்த்த பாபுவுக்கு ஆனந்த அதிர்ச்சி.அங்கே போலிசார் எங்கிருந்தோ பறிமுதல் செய்து வந்த மது பாட்டில்களும் இன்னும் பல பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

உடைந்த ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தான் பாபு.அள்ளிக்கொண்டு போனால் ஆறு மாசத்துக்கு சரக்கு பிரச்சினை இருக்காது! ஆனால்,அவன் அத்தனைக்கும் ஆசைப்படவில்லை!ஒரே பாட்டில்,அதுவும் பீர்பாட்டிலை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது தரையில் ஒரு துப்பாக்கி கிடப்பதைப் பார்த்தான் பாபு.அருகிலேயே தோட்டாக்களும் கிடந்தனவாம்.பாபு அந்த துப்பாக்கியையும் தோட்டாக்களையும் எடுத்து பாக்கெட்டில் போட்டுகொண்டு வந்துவிட்டான்.

அதை கையில் வைத்துக்கொண்டு அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியில் சுற்றி வந்த பாபுவை யாரோ பார்த்து,சென்னை மேற்குமண்டல இணை ஆனையர் விஜயகுமாரிக்கு நேற்று மாலை தகவல் தந்துவிட்டார்களாம்.அவருடைய உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் கோபி,தலைமைக் காவலர்கள் பலராமன்,தாமோதரன் ஆகியோர் கொண்ட குழு பாபுவை தேடிப்பிடித்து அவனிடம் இருந்த துப்பாக்கியையும் எட்டுத் தோட்டாக்களையும் கைப்பற்றி பாபுவை விசாரித்து வருகிறார்கள். 

பீகார் எலிகளைப்போல் தமிழக எலிகளுக்கு குடிப்பழக்கம் இல்லாததால் சரக்கு பாட்டில்கள் காலியாவில்லை,மகிழ்ச்சி.ஆனால் அந்த பூட்டிக்கிடக்கும் குடோனுக்குள் துப்பாக்கி வந்தது எப்படி!? இந்தக் கேள்விக்கு இன்னும் பதிலில்லை.ஒரு வேளை காக்கை கொண்டுவந்து போட்டிருக்குமோ!