கோரிக்கைகளுக்கு செவிக்கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி! மனித நேயமுள்ள  முதலமைச்சர் 

கோரிக்கைகளுக்கு செவிக்கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி! மனித நேயமுள்ள  முதலமைச்சர் 

ஆந்திர மாநிலத்தின் விமான நிலையம் அருகே பதாகைகளுடன் நின்ற மாணவர்களின் கோரிக்கைகளை காரில் சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டறிந்து தீர்வு வழங்கினார்.

ஆந்திர மாநிலத்தின் விமான நிலையம் அருகே பதாகைகளுடன் நின்ற மாணவர்களின் கோரிக்கைகளை காரில் சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டறிந்து தீர்வு வழங்கினார். 

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, அம்மாநிலத்துக்கு நிறைய புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். இவரின் நோ பேக் திட்டம் உள்ளிட்ட பல்வேறு  திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி சென்றார். அப்போது  விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சில கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அதனைகண்ட ஜெகன்மோகன் ரெட்டி, காரைவிட்டு இறங்கி ஏன் இப்படி நிற்கிறீர்கள் என வினவினார்.

jekan

உடனே அந்த மாணவர்கள், ‘ எங்கள் நண்பன் நீரஜ் என்பவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டபடுகிறான். அவனுடைய மருத்துவ சிகிச்சைக்கு பல லட்சம் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரது குடும்பமோ மிகவும் ஏழை. எனவே அவரை குணப்படுத்த முடியாமல் தவித்து நிற்கிறோம். அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கேட்ட ஜெகன் மோகன் ரெட்டி, உடனடியாக ஆந்திர அரசு சார்பாக நீரஜ்க்கு ரூ.20,00,000 வழங்கினார்.