கோயம்பேட்டில் காலை 7:30 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் அனுமதி இல்லை!

 

கோயம்பேட்டில் காலை 7:30 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் அனுமதி இல்லை!

கோயம்பேடு மார்க்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் அதிகமாக பரவிக் கொண்டே வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக செல்லும் கோயம்பேடு மார்க்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு வியாபாரிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகள் கீழ்வருமாறு;

ttn

“கோயம்பேடு சந்தையில் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள் காலை 4 மணி முதல் 7 மணிக்குள் வாங்கிச் செல்ல வேண்டும். அதற்கு பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த கட்டுப்பாடு இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே..3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு இல்லை. அங்காடிக்குள் வரும் வியாபாரிகள் எல்லாரும் கட்டாயமாக மாஸ்க், சானிடைசர் போட்டுக் கொண்டு வர வேண்டும். வியாபாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. மேலும், அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.