கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு சென்ற 107 பேருக்கு கொரோனா உறுதி!

 

கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு சென்ற 107 பேருக்கு கொரோனா உறுதி!

அவர்களிடம் பொருட்கள் வாங்கிச் சென்ற மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்திலேயே அதிகமாக சென்னையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இருந்த இடங்களை முடக்கி. மக்கள் அங்கு செல்லாத வண்ணம் பாதுகாத்து வருகிறது. சென்னையில் ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பினும் கோயம்பேடு மார்க்கெட் வியாபரிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது சென்னை வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. ஏனெனில் கோயம்பேடு வியாபாரிகள் மூலமாக அவர்களிடம் பொருட்கள் வாங்கிச் சென்ற மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

அதனால் மற்ற மாவட்டங்களில் கோயம்பேடு வியாபாரிகள் மூலம் கொரோனா பரவாமல் இருக்க, மற்ற மாவட்டங்களுக்கு சென்ற வியாபாரிகளை கண்டறியும் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களுள் 107 பேர் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்தவர்களாம்.  இதனால் அங்கிருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.