கோயம்பேடு சந்தை மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா!

 

கோயம்பேடு சந்தை  மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா!

தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம்  மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம்  மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

tt

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 600பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 3,043 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

tt

இந்நிலையில்  கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்னும் சில நாட்களில் இந்த தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொடும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததே இதற்கு காரணம். கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடைய 1300 பேர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.